September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 68)

விமர்சனம்

விமர்சனம்

பீஸ்ட் – திரைப்பட விமர்சனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இரகசியமாக ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதி உமர்ஃபரூக் என்பவரைக் கைது செய்துவருகிறார் ரா அதிகாரி விஜய். அவர்கள் பதிலுக்கு சென்னையில் உள்ள வணிகவளாகம் ஒன்றை மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டு, உமர்ஃப்ருக்கை விடுதலை செய்தால்தான் உள்ளே இருக்கும்
விமர்சனம்

டாணாக்காரன் – திரைப்பட விமர்சனம்

ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாறிப்போனதால் காவல்துறையைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள் அறுவெறுப்படைகிறார்கள் சமயங்களில் கோபப்படுகிறார்கள். டாணாக்காரன் படம் பார்த்தால் அவர்கள் எல்லோருமே காவல்துறையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். காவல்துறை பயிற்சி மையம் என்கிற ஒரே மைதானத்தில் பல்வேறு உணர்வுகளைக் கடத்தி சிறப்பாக விளையாடியிருக்கிறார் இயக்குநர் தமிழ். பயிற்சிக்காக
விமர்சனம்

செல்ஃபி – திரைப்பட விமர்சனம்

கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உருவாகியிருக்கிறது செல்ஃபி. நடுத்தர மக்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் மகனை மருத்துவராக்கிவிடவேண்டும் பொறியாளராக்கிவிடவேண்டும் என நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், பெற்றோரிடமிருந்து பணம் பெறாமல்
விமர்சனம்

ஆர் ஆர் ஆர் – திரைப்பட விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதை. படம் தொடங்கியவுடனே ஒரு பழங்குடி இனத்துச் சிறுமியை அவர்கள் அனுமதி இல்லாமலே இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அச்சிறுமியை மீட்க வருகிறார் ஜூனியர் என் டி ஆர்.  அதேநேரம் ஆங்கிலேயர்களிடம் உண்மையாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார் ராம்சரண்.  சிறுமியை மீட்டுப்போக ஒருவன் வந்துவிட்டான் என்றதும்
விமர்சனம்

குதிரைவால் – திரைப்பட விமர்சனம்

ஒருநாள் தூங்கிவிழிக்கும்போது நாயகன் கலையரசனுக்குக் குதிரைவால் முளைத்திருக்கிறது. 38 வயது, வைப்பகத்தில் வேலை, நடுத்தர வாழ்க்கை என இருக்கும் அவருக்கு இப்படி ஒரு விநோத சிக்கல்.காட்சிகளில் குதிரைவாலுடன் அவஸ்தைப்பட்டுக்கொண்டேயிருக்கிறார் கலையரசன். ஆனால் கதைப்படி அது உண்மையன்று. அப்படியானால் அது என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் படம். ரொம்பத் திமிர்
விமர்சனம்

கள்ளன் – திரைப்பட விமர்சனம்

சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்றார் பாவேந்தர்.அதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள்.  அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென்
விமர்சனம்

க்ளாப் – திரைப்பட விமர்சனம்

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவெங்குமே ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதையும் மற்ற பிரிவினர் அத்துறையில் நுழைந்துவிடாமல் முடிந்தவரை தடுத்துவிடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன சில திரைப்படங்கள். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது க்ளாப். இப்படி ஒரு கதாநாயகனின் அறிமுகக்காட்சி எந்தப்படத்திலும் வந்திருக்காது எனும்படி
விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கண்ணா என்கிற கதறலைக் கேட்டுக் கலங்கிய நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட, அதை ஒரு திரைக்கதையாக்கி அப்படிச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாண்டிராஜ் நமக்கும் ஆறுதல் தந்திருக்கிறார். இரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப்
விமர்சனம்

வலிமை – விமர்சனம்

சென்னையை உலுக்கும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கருவறுக்கத் துடிக்கும் அதிரடி காவல்துறை அதிகாரியை அவரது குடும்பத்தினரை வைத்து வில்லன் கூட்டம் மிரட்ட அதை எப்படி எதிர்கொண்டு வெற்றியடைகிறார் என்கிற பழைய ஒரு வரிக்கதைதான் வலிமை என்கிற மூன்று மணி நேரப் படம். அஜீத் அழகாக இருக்கிறார், ஒயிலாக நடக்கிறார், உடல் வளையாமல் நடனமாடுகிறார், துள்ளுந்தில் துரத்துகிறார், அம்மாவிடம்
விமர்சனம்

கடைசி விவசாயி – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது.  அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான்  ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.   ஊரிலுள்ள எண்பது