Home Archive by category Uncategorized

Uncategorized

Uncategorized விமர்சனம்

பேட்டரி – திரைப்பட விமர்சனம்

காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலையில் சேருகிறார் நாயகன் செங்குட்டுவன். அவர் சேருகிற அன்றே, சென்னை நகரில் ஒரு மர்மக் கொலை. காவல்துறை ஆய்வாளர் யோக்ஜேபி தலைமையிலான குழுவில் இணைந்து அக்கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில கொலைகள். அவை எப்படி நடக்கின்றன?
Uncategorized சினிமா செய்திகள்

பத்துதல படப்பிடிப்பு தொடக்கம் – சிம்பு உற்சாகம்

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின்,
Uncategorized

சிக்கல் தீர்ந்தது அருள்நிதி படம் மீண்டும் தொடக்கம் – படப்பெயரும் கசிந்தது

ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார் அருள்நிதி. அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் வேடம் அவருக்கு. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் தயாரானார். அந்தப்படத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது ஒலிம்பியா
Uncategorized சினிமா செய்திகள்

பெரிய படத்துடன் மோதல் – தனுஷின் நானேவருவேன் அதிரடி முடிவு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தில் நாயகன் வில்லன் ஆகிய இரண்டு பாத்திரங்களையும் தனுஷ்
Uncategorized விமர்சனம்

தேஜாவு – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற
Uncategorized விமர்சனம்

நதி – திரைப்பட விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பணக்காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் அரதப் பழசான கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி. நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக இருக்கிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் இன்னும்
Uncategorized விமர்சனம்

பட்டாம்பூச்சி – திரைப்பட விமர்சனம்

பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள். இதுவரை அப்பாவியான நாயகன் வேடத்தில் மட்டுமே பார்த்துவந்த ஜெய்க்கு இந்தப்படத்தில்
Uncategorized

உதயநிதி முன்னிலையில் சுபாஸ்கரன் கமல் சமரசம்

விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து
Uncategorized சினிமா செய்திகள்

இது ராசியில்லாத எண்ணா? – 13 படநிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படம் வெற்றியடைந்தது. அப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த வெற்றிக் கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Uncategorized சினிமா செய்திகள்

அனிருத்தின் அடாவடி – கொலைவெறியில் விக்ரம் படக்குழு

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில்,நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படவெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக படம்