September 7, 2024
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஏபரல் மாதம் தொடங்கிய பிறகும் அப்படம் வெளியீடு குறித்தும் பாடல்கள் வெளியீடு குறித்தும் எந்தத் தகவலும் வரவில்லை.

அதேசமயம், அப்படத்தில் இடம்பெறவேண்டிய ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்தக்காரணங்களால் அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகாது என்று செய்திகள் வெளிவரத் தொடங்கின.

அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படத்தயாரிப்பு நிறுவனம்

அந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து முடிந்துவிட்டதாம். அதோடு முத்ல பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 5 அன்று வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

முதல் பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகும், படமும் ஏற்கெனவே அறிவித்தபடி மே 1 ஆம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts