நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் 67 ஆவது
சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் எஸ்கே 21 என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். இதுவரை
தனுஷை கதாநாயகனாக வைத்து யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
அட்லி இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் பெயரும் வெளியீட்டுத் தேதியும் நேற்று (ஜூன் 2,2022)வெளியானது. ஒன்றரை நிமிடம் ஓடும் குறுமுன்னோட்டமாக அது வெளியானது. அதன்படி படத்துக்கு ஜவான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதோடு படம் ஜூன் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஓராண்டுக்கு முன்பாக அதாவது ஜூன் 2,2023 இல் வெளியாகும் என்று
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில்,நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படவெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக படம்
விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.
2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு எந்தக்கதையும் ரஜினிக்குத் திருப்தியாக இல்லை என்பதால் ரஜினியே ஒரு கதையை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இரகசியமாக ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதி உமர்ஃபரூக் என்பவரைக் கைது செய்துவருகிறார் ரா அதிகாரி விஜய். அவர்கள் பதிலுக்கு சென்னையில் உள்ள வணிகவளாகம் ஒன்றை மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டு, உமர்ஃப்ருக்கை விடுதலை செய்தால்தான் உள்ளே இருக்கும் இருநூற்றுச்சொச்சம் பேரையும் உயிரோடுவிடுவோம் என்று இந்திய ஒன்றிய அரசை மிரட்டுகிறார்கள். அந்தச்
சில நாட்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு