ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதை
விமர்சனம்
இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின் கஷ்டத்தைப் போக்க மருத்துவசிகிச்சைக்காகக் கேரளா செல்கிறார் நயன்தாரா. ஒரு கடுமையான மழை நாளில் நடக்கும் பேருந்துப் பயணம். அப்பேருந்துக்குல், பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்து தன் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையுடன் பயணிக்கும் நடுத்தரவயதுக்காரர்.
சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?
இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2. தலைப்பில் வரும் அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய
2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’. தொடர்வண்டித்துறையில் டிடிஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண
இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சொல்லாடல் உண்டு. அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது 777 சார்லி. படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி. நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை
வழக்கமான திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலக்கணங்களை உடைத்து திரைக்கலை எனும் காட்சி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குப் பக்குவமாகக் கடத்தியிருக்கும் படம் சேத்துமான். இப்படத்தின் கதை என்ன? என்றால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதைதான். அவற்றில் எதைச் சொல்ல? எதை விட்டுவிட? தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை
மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின் நாயகனுக்கு இன்னொரு காதல். அது கல்யாணத்தில் முடிகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையில் வருகிறார்
1990 களில் கோவை மாவட்டம் போத்தனூர் தபால் நிலையத்தில் நடக்கும் கதை. அதனால் போத்தனூர் தபால் நிலையம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச்
























