December 9, 2021
விமர்சனம்

அகடு – திரைப்பட விமர்சனம்

கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள் நான்கு இளைஞர்கள்.போன இடத்தில் ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்படுகிறது.அந்தக்குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு 12 வயது பெண்குழந்தை.திடீரென அப்பெண் குழந்தையும் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள்.

அவர்கள் எங்கே போனார்கள் என மற்றவர்கள் தேடுகிறார்கள்?.காணாமல் போன இளைஞர் பிணமாகக் கிடக்கிறார்? பெண் குழந்தையைக் காணவில்லை. என்ன நடந்தது? என்பதை விளக்கும் படம்தான் அகடு.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய் படம் முழுக்க நிறைந்திருக்கிறார்.விசாரணைக்காட்சிகள் மற்றும் துப்பறியும் காட்சிகள் நன்று. படம் முழுக்க கேரட் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது இயல்பாக இல்லாமல் உறுத்துகிறது.

சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஜோகன் இசையமைத்திருக்கிறார்.அவருடைய இசையில் கபிலனின் பாடல் கதைக்கேற்ப இருக்கிறது. சாம்ராட்டின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகு சுற்றிச் சுற்றிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

புதுமுக இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

பெண் குழந்தை காணாமல் போனதும் எழும் இயல்பான சந்தேகங்களை எழுப்பி விசாரணையைக் கொண்டு சென்றிருப்பது இயல்பு. கடைசியில் முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கும் இடம் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

வழக்கமான துப்பறியும் கதையில் கணவன் மனைவிக்கிடையேயான உறவுகளில் உள்ள பெரும் சிக்கலைப் பற்றிப் பேசியிருக்கிறார் இயக்குநர்.

பேசப்படவேண்டிய விசயம்.

Related Posts