சினிமா செய்திகள் நடிகர்

விஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்

விஷால் நடிப்பில் தயாராகியுள்ள அயோக்யா படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து கொண்டிருக்கிறது.

அப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார் என்றும் இருவரும் இணைந்து துப்பறிவாளன் 2 எடுக்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் திடீர் மாற்றமாக விஷால் இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கெளதம்மேனன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார் என்கிறார்கள். அந்தப் படத்தை சின்னத்தம்பி உட்பட பல திரைப்படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு அந்தப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

சுந்தர்.சி படத்துக்கு அடுத்து இந்தப் படத்தில் விஷால் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts