திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற
சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம். வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு விமானம் மீது அதீத ஈடுபாடு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்றும் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றப்
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு
இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது
சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர்சினிமாஸ் சார்பில் நாகவம்சி எஸ்.சாய் சௌஜன்யாதயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள படம் வாத்தி. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரிஇந்தப்படத்தை இயக்கியுள்ளார். சம்யுக்தா கதாநாயகியாகநடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய்,
கத்துக்குட்டி,உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ்
எர்த் அண்ட் ஏர் (Earth & Air) மற்றும் தி ஐடியா ஃபேக்டரி (The Idea Factory) ஆகிய அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’
குடும்ப உறவுகள் அவை தொடர்பான உணர்வுகள் ஆகியன அழியாவரம் பெற்றவை. இளைஞர், பெரியவர்,சிறியவர் என எல்லோரையும் தொடக்கூடியவை. அவற்றைத் தன்னுடைய எல்லாப்படங்களிலும் கொண்டுவரும் இயக்குநர் ஹரி, யானை படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா, அம்மா, அப்பாவின் முதல்மனைவிக்குப் பிறந்த மூன்று சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் அவர்களுடைய குழந்தைகள்
எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார். அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் படம். டான் என்றால் ரவுடிகளின் தலைவன் என்பார்கள். இந்த டான்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதை. படம் தொடங்கியவுடனே ஒரு பழங்குடி இனத்துச் சிறுமியை அவர்கள் அனுமதி இல்லாமலே இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அச்சிறுமியை மீட்க வருகிறார் ஜூனியர் என் டி ஆர். அதேநேரம் ஆங்கிலேயர்களிடம் உண்மையாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார் ராம்சரண். சிறுமியை மீட்டுப்போக ஒருவன் வந்துவிட்டான் என்றதும்