September 23, 2023
Home செய்திகள் Archive by category சினிமா

சினிமா

சினிமா செய்திகள்

இரண்டு மாதங்கள் தள்ளிப்போனது அயலான்

இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத்
சினிமா செய்திகள்

கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – விஷாலை எச்சரித்த நீதிபதி

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 – கடைசி நேர அதிரடி மாற்றம்

ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர்
சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின்? உண்மை என்ன?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜேசன் சஞ்சய் இயக்குநர் என்ற அறிவிப்பு தவிர வேறெதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாயகன் யார்? என்பதைத் தீர்மானிக்கத்
சினிமா செய்திகள்

விஷால் தரப்பின் அலட்சியத்தால் வந்த வினை

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை – அதிர்ச்சித் தகவல்

நடிகர் விஜய் ஆண்டனி, மனைவி பாத்திமா மகள்கள் மீரா,லாரா ஆகியோர் கொண்ட குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயது நிரம்பிய மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்று இரவு
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் அரவிந்தசாமி

அக்டோபர் 19 ஆம் தேதி, லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாகவிருக்கிறது. அதைத்தொடர்ந்து,வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜய் 68 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி 30 படத்தின் பெயர் இதுதான்?

ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை அகமது இயக்கியிருக்கிறார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கடுத்து நான்கு படங்கள் இருக்கின்றன. புதுஇயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தை ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்போது, அர்ஜூன்
சினிமா செய்திகள்

நெல்சன் தயாரிப்பில் கவின் – புதியபட விவரம்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது. திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார். இப்போது
சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் வீரன் வில்லங்கம் – கேப்டன் மில்லருக்குச் சிக்கல்?

ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்