சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது. அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே
மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல். சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது.
வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் அப்பா திடீரென இறந்துவிடுகிறார். அதனால் அம்மாவும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்துகிறது.கூலிப்படையினர் ஐஸ்வர்யாராஜேஷை பணயக்கைதி போல்
காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் கடைசிகாதல்கதை. அறிமுக நடிகர்
ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2. புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோ. நாயகன் ஸ்ரீ
எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறவர்கள் அரசியல்கட்சித் தொண்டர்கள்.அவர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம்தான் கட்சிக்காரன்.கட்சித் தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன்,அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் இழப்பீடு கேட்பதும்தான் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி
பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காக எத்தகைய அநியாயங்களையும் அலட்சியமாகச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்குத் துணைபோகும் அரசாங்கங்கள் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கொடூர பாதிப்புகள் ஆகியனவற்றை திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் கலகத்தலைவன். நாயகன் உதயநிதி ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்பதைத் தொடக்கக் காட்சியிலேயே காட்டி கதைக்குள்
வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து முன்னேறவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் பொருளீட்டலாம் என்று சொல்லியிருக்கும் மலையாளப் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இளம் வழக்கறிஞர் வினீத்சீனிவாசன் தன் தாயுடன் வசித்து வருகிறார். வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அந்தநிலையில் அவரது அம்மா வீட்டில் விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்.அவருடைய
காதல் படங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். காலங்களில் அவள் வசந்தம் எவ்விதம்? வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார். அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார்?
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் வந்தேவிட்டது. ஆதித்த கரிகாலனாக திரைமுழுதும் விக்ரம் தோன்றும் காட்சியில் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கம் எனப் புளங்காகிதத்துடன் நிமிர்ந்து உட்காருகிறோம். ஆதித்தகரிகாலன் வேடம் இவ்வளவுதானா? இன்னும் இருக்கா? என்று கேட்குமளவுக்கு அந்த வேடத்தின் வீரத்தை,கோபத்தை, ஏக்கத்தை தன் தேர்ந்த நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம்.