சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன்.

இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்‌ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது நிச்சய்ம் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் அஜீத் நேரடி இந்திப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Related Posts