ஆந்திராவிலிருந்து குஜராத் கடல்வரை மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தண்டேல். நாயகன் நாகசைதன்யாவும் நாயகி சாய்பல்லவியும் காதலிக்கிறார்கள்.இந்நிலையில் மீன்பிடிக்கச் சென்ற நாயகன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் சிறைபிடிக்கப்படுகிறார்.அதேநேரம்
விமர்சனம்
அஜீத்தும் த்ரிஷாவும் கணவன் மனைவி.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது விவாகரத்து வரை போகிறது.அந்தச் சூழலில் த்ரிஷாவின் தாய்வீட்டில் அவரைக் கொண்டுபோய் விட மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள்.அநதப் பயணத்தின்போது த்ரிஷா கடத்தப்படுகிறார்.கடத்தப்பட்ட மனைவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனி ஒருவனாக இறங்குகிறார் அஜீத்.கண்டுபிடித்தாரா? கருத்து வேறுபாடு நீங்கி கணவன் மனைவி இணைந்தனரா?
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். என்றார் திருவள்ளுவர்.அதன் பொருள், குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால், உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பதுதான். வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். இவ்விரண்டு கருத்துகளையும் கணவன் மனைவி உறவுக்குள் பொருத்தி கலகலப்பாகக் கதை சொல்லியிருக்கும் படம்தான் ரிங்ரிங்.
இராமாயணக் கதை,திரைப்படமாக,தொலைக்காட்சித் தொடராக,இணையத் தொடராக எனப் பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கிறது. அதில் இன்னொரு புதிய முயற்சியாக வந்திருக்கிறது ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.2டி அனிமேஷன் எனச் சொல்லப்படும் இருபரிமாண இயங்குபடமாக இப்படம் வந்திருக்கிறது. அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த இராமன் திடீரென 14 வருடங்கள் வனவாசம் போகிறார்.அங்கு,இலங்கை
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள அரசியல் கட்சிகளுக்குள் வாரிசு அரசியல் நிறைந்திருக்கிறது.அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவாடுகிறார்.அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இவர்கள்
குடும்பஸ்தன் என்ற சொல் குடும்பக் கஷ்டங்களை வெளிப்படுத்தக் கூடிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பெயரில் வெளியாகியிருக்கும் படத்திலும் அதுவே தான் இருக்கிறது.அதேநேரம், இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் எனும் குறள் வழி படம் நெடுக சிரிக்க வைத்திருக்கிறார்கள். நாயகன் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து சாதிகடந்து திருமணம்
படத்தின் பெயரே இப்படம் என்ன சொல்லப்போகிறது? என்பதைச் சொல்லிவிடுகிறது.ஆம்,இது குடிநோயாளிகளைப் பற்றிப் பேசுகிற படம்தான். நாயகன் குருசோமசுந்தரம், கட்டுமானத் தொழிலாளி.மனைவி இரண்டு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பம்.ஆனால் அவருடைய குடியால் எவ்வளவு சிக்கல்கள்? அதிலிருந்து அவரை மீட்க நடக்கும் போராட்டம் அதன் விளைவுகள்தாம் படம். குருசோமசுந்தரம், குடிநோயாளி வேடத்தை அவ்வ:அவு
ஒரு கொலை,அதைச் செய்தது யார்? என்கிற காவல்துறை விசாரணை.அதிலும் அந்த விசாரணை அதிகாரி தற்போது பணியில் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.அவர் விசாரணையில் இறங்கும்போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லும் படங்கள் நிறைய வந்திருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கக்கூடிய படம்தான் வல்லான். இடைநீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரியாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி.அவருடைய உயரமும்
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்,கணவனே கண் கண்ட தெய்வம் என்பன உட்பட கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழவேண்டும் என்கிற கருத்தியலையும், காதல் போயின் சாதல், காதல் புனிதமானது என்கிற கருத்தையும் ஒருசேர உடைத்து நொறுக்கும் வண்ணம் வந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. காதலியைப் பிரிந்த நாயகன் ரவிமோகன்,கணவனைப் பிரிந்த நாயகி நித்யாமேனன் ஆகியோர் சந்திக்க
நாயகன் நாயகி ஆகியோருக்கிடையே முதலில் மோதல் பின்பு காதல் அதன்பின் பிரிவு என்று போகும் பல படங்கள் வந்திருக்கின்றன.இப்படத்தில் பிரிந்த பின்பு காதலி பெரிய சிக்கலில் மாட்டுகிறார்.அதிலிருந்து அவரை மீட்க முயல்கிறார் காதலன் என்கிற கதையுடன் வந்திருக்கும் படம் நேசிப்பாயா. நாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் முரளியின் இளையமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி.திரைப்படக்