நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால்,தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு,திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை,சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த பராசக்தி ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனம் டான் பிக்சர்ஸ்.அண்மையில் வெளியான இதயம் முரளி படத்தையும் அந்நிறுவனமே தயாரித்திருந்தது.அதைவிட அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரனே அந்தப்படத்தை இயக்கியிருந்தார்.ஜூலை 10 ஆம் தேதி வெளியான இதயம் முரளி,வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பையும் வசூலையும்
அமரன் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,இப்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.இந்தமுறை புதுமையான திரைக்கதையுடன்,இரசிகர்களைக் கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல்முறையாக இணைகிறார்கள். இது தனுஷ் நடிக்கும் 55 ஆவது திரைப்படம்.இப்படத்தின் தலைப்பு
1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது. வால்மீகி என்பவர் திருடனாக இருந்து திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய ஊருக்கே சாமியாவதுதான் கதை. பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதன்பின்,இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார்
நடிகர் தனுஷ் இப்போது 55 படங்கள் நடித்துவிட்டார்.அவருடைய இரண்டாவது படமாக சூலை 4,2003 அன்று வெளியான படம் காதல் கொண்டேன். அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அக்கா விமலகீதா தயாரிப்பில் உருவானது அந்தப்படம்.சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.சுதீப்,டேனியல் பாலாஜி, மூத்த நடிகர் நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு யுபன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதில், அந்தப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்றும் பிரபல திரைப்பட நிதியாளர் அன்புச் செழியன் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அப்போதிருந்து அந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில்,இயக்குநருக்கும்
கல்லூரி மாணவரான தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும்,அவரை நல்ல மனிதனாக மாற்ற முடியும் என முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொடுக்கிறார் நாயகி கீர்த்தி சனோன். வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் கீர்ததி
2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55 தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.




















