September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 64)

விமர்சனம்

விமர்சனம்

தி லெஜண்ட் – திரைப்பட விமர்சனம்

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தருகிற மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்துநிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள்.  அவர்கள் எண்ணம் பலித்ததா?
விமர்சனம்

ஜோதி – திரைப்பட விமர்சனம்

ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார்.  நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய அறுவைசிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார் சரவணன். அன்றிரவு ஷீலாவுக்கு கட்டாய அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துக் கொண்டு
விமர்சனம்

மஹா – திரைப்பட விமர்சனம்

நல்ல வேலை,நீச்சல்குளத்துடன் கூடிய மிகப்பெரிய வீடு மகிழுந்து உள்ளிட்ட வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹன்சிகாவும் அவருடைய மகள் மானஸ்வியும் தனியாக வசித்துவருகிறார்கள். ஒருநாள் ஹன்சிகாவின் மகள் மானஸ்வி கடத்தப்படுகிறார். கடத்தல்காரன் பணம் கேட்டு மிரட்டுகிறான். காவல்துறை உதவியுடன் மகளை மீட்கப் போராடுகிறார் ஹன்சிகா. அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மஹா. படத்தில்
Uncategorized விமர்சனம்

தேஜாவு – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற
Uncategorized விமர்சனம்

நதி – திரைப்பட விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பணக்காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் அரதப் பழசான கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி. நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக இருக்கிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் இன்னும்
விமர்சனம்

சிவி 2 – திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் ஒரு மருத்துவமனைக்குள் சில மாணவ மாணவிகள் செல்கின்றனர். பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்குச் சொல்வதற்காக அனைவரும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அதற்குள் செல்கின்றனர். அங்கு நடப்பவற்றை நேரலையாக ஒளிபரப்பும் செய்கின்றனர். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப் பயத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள். தேங்காய்சீனிவாசன் பேரன் யோகி, சரண்ராஜ் மகன்
விமர்சனம்

மஹாவீர்யர் – மலையாளப் பட விமர்சனம்

அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து ஆசுவாசப்படுத்தும். அந்தவகையில் வந்திருக்கும் மலையாளப்படம் மகாவீர்யர்.  மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மக்களாட்சியைக்
விமர்சனம்

கார்கி -திரைப்பட விமர்சனம்

ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்மணி, அரசதிகாரம், அரக்கர்களெனத் தோரும் ஊடகத்துறை, திடீரென முளைத்த கொலைவெறி கொண்ட எதிரிகள் மற்றும் உறவுகள் ஆகியனவற்றுக்கெதிராகப் போராடுவதை மிக மிக எதார்த்தமாகச் சொல்லியிருக்கும் படம்தான் கார்கி. பள்ளி ஆசிரியையான சாய்பல்லவிக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணக் கனவுகளுடன் இருக்கும் அவர் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும்  எதிர்பாராத நிகழ்வு மொத்த
விமர்சனம்

இரவின் நிழல் – திரைப்பட விமர்சனம்

பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்கு மட்டுமன்று ஆண்குழந்தைகளும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அதன் விளைவுகள் என்னென்ன? என்பதையும் உளவியல் ரீதியாக அணுகி கதை சொல்லியிருக்கிறார் பார்த்திபன். உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்கிற பெருமையுடன் வெளியாகியிருக்கும் இரவின்நிழல் படத்தில் பார்த்திபன் இரவாகவும் நிழலாகவும் இருக்கிறார். அவருடைய
விமர்சனம்

நிலை மறந்தவன் – திரைப்பட விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சி காரணமாக இப்போது இந்திய ஒன்றியம் என்றழைக்கப்படும் நிலப்பகுதிக்குள் கிறித்துவ மதமும் வந்தது. அன்பு கருணை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட அந்த மதத்தைச் சார்ந்தவர்கள், இந்நாட்டில் வெகுமக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வழங்கினார்கள். அதனால் அந்த மதத்தின்பால் பற்றுக் கொண்டு ஏராளமானோர் அந்த மதத்துக்குச் சென்றனர். வெள்ளையர்கள் போய் எழுபத்தைந்து