விமர்சனம்

யாரோ – திரைப்பட விமர்சனம்

ஒரு பெரியவீட்டில் தனியாக வசிக்கிறார் நாயகன் வெங்கட்ரெட்டி. கட்டிடப்பொறியாளரான அவர் உயர்நடுத்தர வாழக்கையில் இருக்கிறார்.அடிக்கடி கொடும்கனவுகள் அவருக்கு வருகிறது. கனவைத் தாண்டி திடீரென அவர் வீட்டுக்குள் மர்மநபர்களின் நடமாட்டம் அதைத் தொடர்ந்து சில கொலைகள் என பரபரப்பு ஏற்படூகிறது.

யார் அந்த மர்ம நபர்கள்? எப்படி கொலைகள் நடக்கின்றன? அவற்றைச் செயவது யார்? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் படம்.

நாயகன் வெங்கட்ரெட்டியே தயாரிப்பாளர் என்பதால் படம் முழுக்க அவரை வைத்தே எடுத்திருக்கிறார் இயக்குநர் சந்தீப்சாய்.

வெங்கட்ரெட்டி நடக்கிறார், ஓடுகிறார், பைக்கில் போகிறார், காரில் போகிறார், கோபப்படுகிறார், பயப்படுகிறார் இப்படி தொடர்ந்து அவர் மட்டுமே படத்தில் நிறைந்திருக்கிறார். பார்க்கமுடியவில்லை.

நாயகியாக உபாசனா. பெயருக்குத்தான் அவர் நாயகி. படத்தில் அவர் வெகுசில காட்சிகளில் மட்டும் வருகிறார்.சாம்ராகினி என்று இன்னொரு நாயகியும் இருக்கிறார். அவரையும் வீணடித்திருக்கிறார்கள்.

காவல் அதிகாரியாக வரும் சி.எம்.பாலா வேடத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்.

ஜோஸ்ப்ராங்க்ளின் இசை திகில் படம் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது.

கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவு தாழ்வில்லை.

படத்தொகுப்பாளர் அனில்க்ரிஷ் பாவம். குழப்பமான திரைக்கதையை புரியவைக்க முயன்றிருக்கிறார்.

இயக்குநர் சந்தீப்சாய்,நாயகனாக நடிக்கும் தயாரிப்பாளரைத் திருப்தி செய்தால்போதும் என்றே படத்தை எடுத்திருக்கிறார். பார்வையாளர்கள்தாம் பாவம்.

Related Posts