Home Articles posted by cadmin (Page 541)
சினிமா செய்திகள் நடிகை

ஓவியா பெயர் சொல்லி மோசடி – உடனே விளக்கமளித்த ஓவியா

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 24 ,2018 அன்று இசைத்திருவிழா நடக்கவிருக்கிறது. அவ்விழாவில் தமிழகத்திலிருந்து பிக்பாஸ்2 புகழ் பாடகி ரம்யா, சக்திஶ்ரீகோபாலன், பாடகர் அந்தோணிதாசன், நடிகை ரம்யாநம்பீசன் உள்ளிட்ட பலரோடு நடிகை ஓவியாவும் கலந்து கொள்வதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சமூக வலை
சினிமா செய்திகள் நடிகர்

கடைசி நேர நெருக்கடியில் தனுஷை அதிர வைத்த எஸ்.ஜே.சூர்யா

ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அவரே நாயகன். செப்டம்பர் 6
சினிமா செய்திகள் நடிகர்

சர்கார் பாடல் விழா இங்கே நடக்கிறதா? வியப்பில் திரையுலகம்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றால் மிகப் பெரிய படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம். இதுவரை யாரும் செய்யாத மாதிரி பெரிதாகச் செய்யவேண்டும் என்பதால்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் பேட்ட பெயர் குறித்து பா.இரஞ்சித் கருத்து இதுதான்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக்
சினிமா செய்திகள்

ரஜினி படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது ‘2.0’. இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு
விமர்சனம்

தொட்ரா – திரைப்பட விமர்சனம்

பழனி அருகே சமுத்துவபுரத்தில் வசிக்கும் நாயகன் பிருத்விராஜுக்கும் சாதிச் சங்கப் பிரமுகராக இருக்கிற எம்.எஸ்.குமாரின் தங்கை நாயகி வீணாவுக்கும் காதல். இந்தக்கதையை வைத்துக்கொண்டு சமகாலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஆணவக் கொலை நிகழ்வை திரைக்கதையில் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். நாயகன் பிருத்விராஜ், நாயகி வீணா ஆகியோரின் காதல் காட்சிகள் வழக்கம் போல் இருந்தாலும்
சினிமா செய்திகள்

செக்கச் சிவந்த வானம் பாடல் விழா – விஜய்சேதுபதி ஏன் வரவில்லை?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செபடம்பர் 5 அன்று நடைபெற்றது. விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். கார்த்திக், சின்மயி ஆகிய இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். படத்தில் நடித்திருக்கும் சிம்பு,அருண்விஜய், அரவிந்த்சாமி, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகை

தெலுங்கு நடிகர் மீது புதிய குற்றச்சாட்டு – மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.தெலுங்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் சிலர் மீது குற்றம் சுமத்தினார். கொஞ்சகாலம் அமைதியாக இருந்த அவர், இப்போது தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா மீது ஊழல் புகார்களை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:–
சினிமா செய்திகள்

நிகழ்ச்சியை பிரபலப்படுத்த பிக்பாஸ் குழு செய்யும் வேலை – அம்பலப்படுத்திய சினேகன்

கவிஞர் சினேகன் பிக்பாஸ் முதல் பாகத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது எல்லோருடனும் இனிமையாகப் பேசிப் பழகினார் சினேகன். எல்லா போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார். வையாபுரி, ஜூலி, ஓவியா, காயத்ரி, ஆரவ் என எல்லோருடனும் சகஜமாகப் பழகினார். மனம்விட்டுப் பேசினார். கிட்டத்தட்ட எல்லோரும் வெளியேறிய நிலையில், ஆரவ்வும் சினேகனும் மட்டுமே இறுதிச்சுற்றில் நின்றனர். பலத்த
சினிமா செய்திகள் நடிகர்

அடுத்த படத்துக்காக சூர்யா அமைத்த அதிரடிக் கூட்டணி

சூர்யா இப்போது செல்வ ராகவன் இயக்கத்தில் என் ஜி கே படம் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொள்கிறார். இவற்றில் என்ஜிகே படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. அடுத்து கே.வி.ஆனந்த் படம் இருக்கிறது. இந்நிலையில் இவற்றிற்கு அடுத்து ஓர் அதிரடிக் கூட்டணியை