சினிமா செய்திகள் நடிகர்

சர்கார் பாடல் விழா இங்கே நடக்கிறதா? வியப்பில் திரையுலகம்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றால் மிகப் பெரிய படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம்.

இதுவரை யாரும் செய்யாத மாதிரி பெரிதாகச் செய்யவேண்டும் என்பதால் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை, சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் விழாவை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம்.

கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் முதல் திரைப்பட விழாவாக இது இருக்கும் என்பதால் அதைப் பிரமாண்டமாகவும் நடத்த திட்டமிடுகிறார்களாம்.

திரைப்பட விழாவுக்கு மைதானத்தைத் தருவார்களா? சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் மைதானம் கிடைக்கும் என்கிறார்கள்.

இவ்விசயம் தெரிந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

Related Posts