சினிமா செய்திகள்

மீண்டும் இணைகிறது டிசி கூட்டணி – புதியதகவல்

அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் டிசி.இப்படத்தில் வாமிகாகபி,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,கஸ்தூரிராஜா,தலைவாசல் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.அனிருத் இசையமைத்திருக்கிறார்.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் ஆகஸ்ட் 7 அன்று வெளியானது.அன்றுமுதல் இன்றுவரை நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.முதல் மூன்றுநாட்கள் மட்டுமின்றி நான்காவது நாளான வேலை நாளிலும் கூட்டம் குறையாமல் ஓடுவது பெரியவிசயம் என்கிறார்கள்.

இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் நிறைய வன்முறைகள்,ஏ சான்றிதழ் ஆகிய பலவீனங்களைத் தாண்டி இந்தப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார் என்றவுடன் வந்த எதிர்மறை விமர்சனங்களையெல்லாம் தூள்தூளாக்கியிருக்கிறது படத்துக்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு.

இந்நிலையில்,இயக்குநர் அருண்மாதேஸ்வரன் மற்றும் நாயகன் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது,இருவரையும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் கலாநிதிமாறன்.அதோடு,நீங்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்யவேண்டும் அதையும் சன் பிகசர்ஸே தயாரிக்கும் என்று கேட்டிருக்கிறார்.

இருவரும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்களாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் இருவரும் ஒரு புதிய திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.இப்படம் தற்காலிகமாக ‘ஏஏ23’ (அல்லு அர்ஜுனின் 23 ஆவது படம்) மற்றும் ‘எல்கே7’ (லோகேஷின் 7 ஆவது படம்) என்று அழைக்கப்படுகிறது.2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

லோகேஷ் கனகராஜ் அந்தப்படத்தை முடித்துவிட்டு அருண்மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் தருவார் என்று சொல்லப்படுகிறது.அதற்குள்,அருண்மாதேஸ்வரனும் முழுமையான திரைக்கதையோடு தயாராகிவிடுவார் என்று சொல்கிறார்கள்.

ஒருவேளை அல்லுஅர்ஜூன் உடனடியாகத் தயாராகவில்லை என்றால்,இந்தப்படத்தை முதலில் தொடங்கி வேகமாக முடித்துவிடவும் இவர்கள் தயாராக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

டிசி படத்துக்காக அருண்மாதேஸ்வரனுக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் கொடுக்கப்பட்ட சம்பளத்தைக் காட்டிலும் இரண்டு மடங்காக இந்தப் புதியபடத்துக்குக் கொடுப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறதாம்.

இயக்குநராகப் புகழ்பெற்று நாயகனாக நடித்த முதல்படமே வெற்றி என்பதும் அது உடனடியாக அடுத்தபட வாய்ப்பையும் பெற்றுத் தந்திருக்கிறது என்பதால் லோகேஷ்கனகராஜ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

Related Posts