சினிமா செய்திகள்

இந்தப்படத்திலும் இரட்டை வேடங்கள் – விஜய் 65 பட புதியதகவல்

விஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும்
அந்தப்படத்தில் காஜல் அகர்வால், மடானோ செபாஸ்டின் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் இந்தப்படத்துக்கான பாடல்பதிவு தொடங்கிவிட்டதென்கிறார்கள்.

2021 பொங்கல் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப திரைக்கதையை மெருகேற்றும் வேலைகளை ஏ.ஆர்.முருகதாஸ் குழுவினர் செய்துவருகிறார்களாம்.

இந்நிலையில், இந்தப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளீயாகியுள்ளது.

கடைசியாக வெளியான பிகில் உட்பட பல படங்களில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் அவருடைய வேடம் மிகவும் மாறுபட்ட முறையில் வடிவமைக்கப்படவிருக்கிறதாம்.

படத்துக்குப் ப்லம் என்பது மட்டுமின்றி விஜய் இரசிகர்களீன் கொண்டாட்டத்துக்கு வழிவகுக்கும் வேடங்களாக அவை இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Related Posts