சினிமா செய்திகள்

வரலட்சுமி சரத்குமார் படத்தால் எழும் கேள்விகள்

ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள், கீர்த்திசுரேஷ் நடித்த பெண்குயின், காயத்ரி ரகுராம் நடித்த யாதுமாகி நின்றாய் ஆகிய படங்கள் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகின.

இவற்றில் பொன்மகள்வந்தாள் படம் தவிர மற்ற இரு படங்களும் கவனிப்பாரின்றிப் போய்விட்டன.

இந்நிலையில் நான்காவதாக ஒரு படம் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது.

சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டேனி. பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.

க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படம்தான் இணையத்தில் வெளியாகவிருக்கிறது.

முந்தைய படங்களைப் போலவே இதுவும் கதாநாயகியை மையப்படுத்திய படம்.

இதனால், தொலைக்காட்சிகளைப் போல பெண்களை மையப்படுத்திய கதைகளை மட்டும்தான் இணைய நிறுவனங்கள் விரும்பி வாங்கி வெளியிடும் எனும் கருத்துகள் வரத்தொடங்கியிருக்கின்றன.

அப்படின்னா இவை தொலைக்காட்சித் தொடர்களின் இன்னொரு வடிவமாகிவிட்டனவா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.

Related Posts