சினிமா செய்திகள்

மாரிசெல்வராஜ் அமீர் இணையும் புதியபடம் – விவரம்

கதிர்,ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிப்பில்,பா.இரஞ்சித் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ்.

அதன்பின் அவர் இயக்கிய,தனுஷ் நாயகனாக நடித்த கர்ணன்,உதயநிதி நாயகனாக நடித்த மாமன்னன்,நிகிலாவிமல் நாயகியாக நடித்த வாழை,துருவ் விக்ரம் நாயகனாக நடித்த பைசன் காளமாடன் ஆகிய எல்லாப் படங்களும் வெற்றி பெற்றன.

இவற்றில் வாழை படத்தை, நவ்வி ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருந்தார்.

அடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒருபடம் கதிர் நடிப்பில் ஒருபடம் ஆகியனவற்றை இயக்கும் வேலைகளில் இருக்கிறார்.முதலில் கதிர் நடிக்கும் படமும் அதுமுடிந்த பின்பு தனுஷ் நடிக்கவிருக்கும் படமும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே,இப்போது அவர் முழுமையான தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் காளமாடன் படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடித்திருந்தார் இயக்குநர் அமீர்.இப்போது மீண்டும் அவ்விருவர் கூட்டணியில் ஒருபடம் உருவாகவிருக்கிறது.

இம்முறை மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமீர் நடிக்கவில்லை.மாரிசெல்வராஜ் தயாரிக்கும் படத்தில் அமீர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தை மாரி செல்வராஜிடன் உதவியாளராகப் பணியாற்றிய அரவிந்த் என்பவர் இயக்குகிறார்.கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றில் மாரி செல்வராஜின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் அமீருடன்,லப்பர்பந்து புகழ் சுவாசிகா இணைந்து நடிக்கவிருக்கிறார்.

நவ்வி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கான தொடக்க நிகழ்வை,அண்மையில் மிக எளிய முறையில் நடத்தியிருக்கிறார்கள்.

முழுமையான நடிகர் நடிகையர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் ஆகியனவற்றை முடித்த பிறகு,இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்கள்.

இயக்குநர் அமீர்,தேர்ந்தெடுத்து நடிக்கிற வேடங்கள் எல்லாமே கவனம் ஈர்க்கிற கதாபாத்திரங்களாகவே அமைந்திருக்கின்றன.இந்நிலையில் அவர், கதாநாயகனாகவே நடிக்கிற படம் என்பதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Related Posts