இருமொழிப் படம் குறித்து கிளம்பிய வதந்தியும் கார்த்தியின் விளக்கமும்
நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் ரவி உடுகுலா. ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரவு உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும், கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் செய்தி வெளியானது. இதை கார்த்தி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கார்த்தி கூறியிருப்பதாவது….
ரவு உடுகுலா இயக்கத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி. அப்படி ஒரு படத்தில் நடிக்கவில்லை.அது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
கார்த்தி இப்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
திரையுலக வேலைநிறுத்தம் முடிந்தவுடன் ‘கார்த்தி 17’ என்ற அடுத்த படத்தில் முழுவீச்சில் அவர் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.











