சினிமா செய்திகள்

முன்னாள் காதலரை மணக்கிறாரா ரஜினி மகள்? – பரபரக்கும் வதந்தி

நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்தார்.இவர்கள் இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், சனவரி 17, 2022 இரவு தனித்தனியாக வெளியிட்ட அறிக்கையில்,

18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

என்று தெரிவித்தனர்.

அதன்பின் அவர்கள் இருவரையும் சமரசம் செய்து சேர்ந்தே இருக்கவைக்கும் முயற்சிகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லையாம்.

இப்போது, ஐஸ்வர்யா, முன்னாள் காதலர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் குடும்பத்தில் பெரும் சர்ச்சை எழுந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

திரையுலகில் மிகவும் உயர்மட்டங்களில் தற்போது பேசப்படும் பரபரப்பான பேச்சாக இது இருக்கிறது.

இது நடக்குமா? நடக்காதா? என்கிற பட்டிமன்றமே நடந்துகொண்டிருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.

சம்பந்தப்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்காத வரை இவை வெறும் வதந்திகளே.நடந்துவிட்டால் பெரும் பரபரப்புச் செய்தியாக இருக்கும்.

Related Posts