சினிமா செய்திகள் நடிகை

கல்யாணமாகாமலே கர்ப்பம் தரித்த நடிகை

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த
மதராசப் பட்டிணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன்பின், ஐ, கெத்து உட்பட பல படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த 2.ஓ படம் கடைசியாக வெளியானது.

அவருக்கும் இலண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சய தார்த்தம் நடந்தது. இருவரும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்கள்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, எமி ஜாக்சன் தாய்மை அடைந்திருக்கிறாராம்.

இதை அவரே சொல்லியிருக்கிறார். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில்,கூரை மீது ஏறி சத்தமாக கத்த வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், அன்னையர் தினமான இன்று சொல்வதுதான் பொருத்தமான ஒன்று. இந்த உலகத்தில் உன்னை விட வேறு யாரையும் நான் இந்த அளவிற்கு நேசிக்கவில்லை. சுத்தமான மதிப்பான காதல் அது. நமது குட்டி லிப்ராவைப் பார்க்க நாம் காத்திருக்க முடியாது

இவ்வாறு அவர் சொல்லியிருக்கிறார்.

வெள்ளைக்காரர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.

Related Posts