சினிமா செய்திகள்

தனுஷ் படத்தைக் கைப்பற்ற சன் டிவி விஜய் டிவி போட்டி – வென்றது யார்? வியப்பூட்டும் செய்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒய் நாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இலண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாம்.அதற்கான விலை சுமார் ஒன்பது கோடி என்று சொல்லப்படுகிறது.

இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இந்தப்படத்தை சுமார் பத்து கோடி விலைக்கு சன் தொலைக்காட்சி கேட்டதாகச் சொல்லப்படுவதுதான்.

சன் தொலைக்காட்சியை மறுதலித்து சுமார் ஒரு கோடி விலை குறைவாக விஜய் தொலைக்காட்சிக்கு தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார் என்பது எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

Related Posts