சினிமா செய்திகள்

திரையரங்குகள் திறப்பது குறித்த புதிய தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.அதன்பின் சில நாட்களில் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.

திரையரங்குகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட நூறுநாட்கள் ஆகிவிட்டன.

கொரோனா பாதிப்பு தொடர்வதால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில்தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பிவிஆர் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து,கொரொனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் முதல்கட்டமாகவும் படிப்படியாக மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்தும் திரையரங்குகளைத் திறக்கக் கோரிக்கை வைத்ததார்களாம்.அதற்கு அவரும் சம்மதித்திருக்கிறாராம்.

அதன் காரணமாக ஜூலை 15 முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts