இன்னும் முடியாத லேடிசூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து – ஓ2 டீசர் பரபரப்பு
புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை மே 6,2022 அன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் உருளையை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள்? என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் ஓ2.
இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்தப்படத்தின் பெயரை அறிவித்தபோதே அதில் நயன்தாரா வின் ஓ2 என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் இடம்பெறாமல் இருந்தது.
அதனால் பெயர் அறிவிப்பை தங்களுடைய பக்கங்களில் பகிராமல் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் புறக்கணித்தனர்.
இப்போது டீசரிலும் லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் இல்லை. ஆனாலும் அதைத் தன் பக்கத்தில் பகிர்ந்து அதில் லேடிசூப்பர்ஸ்டார் எனப்போட்டு ஆறுதல் அடைந்திருக்கிறார் விக்னேஷ்சிவன்.
டீசர் பார்க்க…..











