சினிமா செய்திகள்

விஜய் அஜீத் படங்களை இயக்குங்கள் – இயக்குநர் சேரனுக்கு வேண்டுகோள்

ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள்.

விஜய் பிறந்த நாளன்று சமூக வலைதளங்களில், விஜய் குறித்த தகவல்கள் எனப் பலருமே பகிர்ந்து வந்தார்கள். இதில் ஜெயா தொலைக்காட்சியில் ‘ஆட்டோகிராஃப்’ படம் தொடர்பாக விஜய் பேசியது குறித்த காணொலி ஒன்றை, இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டனர்.

அதர்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது…..

பிரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்குப் பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒப்புக்கொண்டார். நான்தான் ‘தவமாய் தவமிருந்து’ படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.

அந்தத் தவறை நான் செய்திருக்கக் கூடாது. இந்தத் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். இந்தத் தவறுக்கான வருத்தத்தை விஜய்யைப் பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.

அவரிடம் ‘ஆட்டோகிராஃப்’ கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்தத் தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்…அவ்வளவு டெடிகேஷன்… அதுவே இன்று அவரின் உயரம்”.

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

சேரனின் இந்தக்கருத்துக்கான பின்னூட்டங்களில் விஜய்யுடன் இணைந்து சேரன் படம் செய்யவேண்டும் என்று பலர் கூறியுள்ளனர்.

அவற்றில் ஒருவர்,இருவரும் இணைந்தால் எங்களுக்கு இன்பமே. அப்படியே அஜித் சாரோட ஒரு படம் பண்ணுங்க அண்ணா என்று சொல்லியிருக்கிறார்.

சேரன் இப்போது விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts