சினிமா செய்திகள்

குடும்பத்தோடு பார்க்கிற படம் கஜினிகாந்த் – இயக்குநர் உறுதி

சன்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் கஜினிகாந்த்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

இப்படம் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயகுமார் கூறியதாவது…

என் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு குடும்பத்தோடு பார்க்கிற படங்கள் எடுங்கள் என்று சொன்னார்கள்.

இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கிற மாதிரி இருக்கும்.

ஆர்யா,சாயிஷா, ஆடுகளம் நரேன் சார் உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்து படத்தை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு பலமாக சதீஷ் இருப்பார். அவருடைய நகைச்சுவைகள் நன்றாக அமைந்திருக்கிறது.

எனக்கு அமைந்த படக்குழு மிகவும் சிறப்பானது. அவர்கள் அனைவரும் ஒத்துழைத்ததால் படத்தை 38 நாட்களில் முடிக்க முடிந்தது.

நான் தொடர்ந்து இதே பாதையில் பயணிக்க நீங்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts