October 30, 2026
சினிமா செய்திகள்

சிம்புவின் இரட்டை தீபாவளி விருந்து – துள்ளிக் குதிக்கப் போகும் இரசிகர்கள்

எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் அவர் அதிரடியான கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.2025 ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் சிம்பு.அந்தப்படத்துக்கு அதற்கும் ஒரு மாதம் முன்னால் பூஜை போடப்பட்டுவிட்டது.அப்படத்தில் நாயகியாக கயாடு லோகர், நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம், இசையமைக்க சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால்,எதிர்பாராவிதமாக அந்தப்படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.அதன் காரணமாக அவர்கள் உடனடியாக அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.அதன்பின் இப்போதைக்கு நடக்காது என்றானது.

இதனால் சிம்பு உட்பட எஸ்டிஆர் 49 படக்குழுவினர் அனைவரும் பேரரதிர்ச்சிக்கு ஆளாகினர்.ஆனால் டக்கென அதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.ஏற்கெனவே தொடர்பில் இருந்த வெற்றிமாறனை அழைத்து உடனடியாகப் படப்பிடிப்புக்குச் செல்லத் தயாரா? எனக் கேட்டிருக்கிறார் சிம்பு.அவரும் தயார் என்று சொன்னதும் வேகவேகமாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கிவிட்டன.

சொன்னபடி ஜூன் 16 அன்று அரசன் படத்தின் விளம்பரப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டார்.சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் பல தடைகளுக்குப் பிறகு டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.அதன்பின் விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்தது.அரசன் படத்தை இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியிடத் திட்டமிட்டனர்.ஆனால் திட்டமிட்டபடி அது நடக்கவில்லை.

அதனால் வருத்தத்தில் இருந்த சிம்பு இரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் இரண்டு நிகழ்வுகள் தீபாவளி நாளில் நடக்கவிருக்கிறது.

ஒன்று,அரசன் படத்தின் சுமார் எட்டு நிமிடக் காட்சிகள் தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது.படத்தில் பங்குபெறும் எல்லா நடிகர் நடிகையரும் தோன்றவிருக்கும் அந்தக்காட்சிகள் படத்தின் சிறந்த முன்னோட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

இன்னொன்று,அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் முதல்தோற்றம் தீபாவளி நாளில் வெளியாகவிருக்கிறது.பல வியப்புகளை உள்ளடக்கியிருக்கும் அந்தப்படத்தின் அறிவிப்பு சிம்பு இரசிகர்களை மட்டுமின்றி திரைப்பட இரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Related Posts