October 30, 2026
சினிமா செய்திகள்

இயக்குநர் அட்லியும் ஜேசன் சஞ்சய்யும் இணைகிறார்கள் – விரைவில் அதிரடி

தமிழக முதல்வர் விஜய் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் சிக்மா.மிகப்பெரும் நம்பிக்கையுடன் அவர் இயக்கிய் அந்தப்படம் அக்டோபர் 2,2026 அன்று வெளியானது.ஆனால்,அவர் எதிர்பார்த்ததுபோல் அப்படம் வெற்றியடையவில்லை.வசூல் வெற்றி இல்லாவிட்டாலும் உள்ளடக்கத்திற்காக கவனம் ஈர்க்கும் படங்கள்,பாராட்டுப் பெறும் படங்கள் வரிசையிலும் அந்தப்படம் இடம்பெறவில்லை.

இதனால் சோர்ந்துபோன ஜேசன் சஞ்சய்,பாதையை மாற்ற முடிவுசெய்துவிட்டார்.

அவரை கதாநாயகனாக நடிக்கக்கேட்டு பலர் அணுகினார்கள்.அப்போதெல்லாம் வந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டார்.இப்போது அதை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

அவருடைய முதல்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே நடிகராகவும் அறிமுகமாகவிருக்கிறார்.அவருடைய சித்தப்பா சஞ்சீவ் இயக்கவிருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால்,அப்படி நடக்கவில்லை.

ஜேசன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றதும் அவருக்குக் கதை சொல்ல பலர் தயாரானார்க.சிலர் கதை சொல்லியுமிருக்கிறார்கள்.இதெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே,என் அண்ணன் மகனுக்கு நான்தான் செய்வேன் என்று களமிறங்கிவிட்டாராம் இயக்குநர் அட்லி.

அப்படியானால்,ஜேசனை வைத்து அவரே இயக்கவிருக்கிறாரா என்றால்? இல்லை.

அவருடைய தயாரிப்பில் ஜேசனை நாயகனாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறார்.அதை ஜேசனிடம் சொல்ல அவரும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.

இதனால்,ஜேசனுக்குக் கதை சொல்லுங்கள் எனப் பலரிடம் கேட்டு,ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அட்லி.அந்தக்கதை,பிரதீப் ரங்கநாதனை வைத்து டியூட் படமெடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனுடையது என்கிறார்கள்.அட்லி தேர்ந்தெடுத்த அந்தக்கதை ஜேசனுக்கும் பிடித்திருக்கிறதாம்.

கீர்த்தீஸ்வரன் இப்போது சிம்புவை நாயகனாக்கி ஒருபடம் எடுக்கவிருக்கிறார்.அதற்கான வேலைகள் சில மாதங்களாக நடந்துகொண்டிருக்கின்றன.எழுத்து வேலைகள் மற்றும் முன் தயாரிப்பு வேலைகள் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,திடீரென இப்படி ஒரு வாய்ப்பு வந்திருப்பதால்,சிம்புவிடமும் கலந்தாலோசித்திருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.அவரும்,கண்டிப்பாகச் செய்யுங்கள்.சூழலைப் பொறுத்து படப்பிடிப்பைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

சிம்பு நடிக்கும் படத்தை முழுமையாக முடித்துவிட்டு இந்தப்படத்தைத் தொடங்குவதா? அல்லது அது நடக்கும்போதே இதையும் எடுப்பதா? அல்லது ஜேசன் படத்தை முதலில் தொடங்கி வேகமாக முடித்துவிடுவதா? என்கிற ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டால்,அட்லி தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகிவிடும் என்கிறார்கள்.

தீபாவளி அல்லது அதுமுடிந்தவுடன் ஒரு நல்லநாளில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Related Posts