அரசன் படக்காட்சிகள் பார்த்து மிரண்ட தனுஷ் – புதியதகவல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன.
அதன்பின்,இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருந்தபோதுதான் திடீரென நிறுத்தப்பட்டது.
அதற்குக் காரணம், தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் கொடுத்த புகார்தான். அதன் முழுவிவரம் தெரிய இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்..
இப்போது,அரசன் படப்பிடிப்பு மட்டுமின்றி இடையில் அவர் நடிக்கவிருந்த விளம்பரப் படப் படப்பிடிப்பும் தடைபட்டிருந்தது.உடனடியாக அந்த விளம்பரப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கவிருக்கிறார் சிம்பு என்று சொல்கிறார்கள்.
அதை முடித்தபின்பு, அரசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அனேகமாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்கிறார்கள்.அரசன் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்று இருக்கிறாராம் சிம்பு.
இதற்கிடையே,அரசன் தடைபட்டதால்,ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ராஜன் வகையறா இணையத் தொடரின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு அந்த வேலைகளில் இருந்தார் வெற்றிமாறன்,அதுதொடர்பாக நடிகர் தனுஷை சந்தித்திருக்கிறார்.
அந்தப் பேச்சுக்கிடையே, இதுவரை அரசன் படத்துக்காக எடுத்தவற்றைத் தொகுத்து வைத்திருந்த காட்சிகளை நடிகர் தனுஷிடம் காட்டியிருக்கிறார்.
அதைப் பார்த்த தனுஷ் மிரண்டுபோய்விட்டாராம்.என்ன சார் இப்படி எடுத்துவச்சிருக்கீங்க? சூப்பரா இருக்கு,சூப்பரா இருக்கு என்று பாராட்டித் தள்ளிவிட்டாராம்.காட்சிகளைப் பற்றி மட்டுமின்றி, சிம்புவின் நடிப்பைப் பற்றியும் பாராட்டிப் பேசிய அவர்,சிம்பு நடிப்பில் நுணுக்கமாகச் சில விசயங்களைச் சொல்லி வியந்திருக்கிறார்.
இதனால்,இயக்குநர் வெற்றிமாறன் மிகுந்த உற்சாகமாகிவிட்டார் என்று சொல்கிறார்கள்.
இப்போது,ராஜன் வகையறா படப்பிடிப்பில் இருக்கும் வெற்றிமாறன்,திட்டமிட்டபடி அதன் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசன் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
அதன்படிதான்,ஏப்ரல் 21 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.
அதோடு, இந்தப்படத்தை மிகவிரைவாக முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று தயாரிப்பாளருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாராம் வெற்றிமாறன்.
அரசன் படத்துக்கு திடீரென வந்த சோதனையால் தவித்துப்போன இயக்குநர்,தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் சோதனைகளைச் சாதனைகளாக்கி வெல்வோம் என்கிற உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறார்களாம்.











