அஜித் பட முதல்பார்வை அவசர அவசரமாக வெளியிட்டது இதனாலா?
ஆகஸ்ட் 23 அதிகாலை 3.40 மணிக்கு அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது.
அஜித்தின் வியாழக்கிழமை பக்தி காரணமாக இன்று அதிகாலை வெளியிடப்பட்டது.
நேற்று இரவு ஒன்பது மணியளவில் அதிகாலை 3.40 மணிக்கு முதல்பார்வை வெளியீடு என்று ஒரு ட்விட்டர் பதிவைப் போட்டுவிட்டு அவசர அவசரமாக முதல்பார்வையை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதற்கு உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
ஆனால் இப்போது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது என்ன தெரியுமா?
அண்டை மாநிலமான கேரளா வெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்திருக்கிறது. அதிதீவிர இயற்கைப் பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது..
இதனால், தமிழகத்திலிருந்து ஏராளமான உதவிகள் அங்கு சென்று கொண்டிருக்கின்றன.
திரைத்துறையினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
விக்ரம் 35 இலட்சம், விஜய்சேதுபதி 25 இலட்சம், கமல் 25 இலட்சம், சூர்யா – கார்த்தி 25 இலட்சம், ரஜினி 15 இலட்சம், தனுஷ் 15 இலட்சம் உட்பட பல நடிகர்கள்,நடிகைகள், இயக்குநர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
நடிகர் விஜய் இவ்வளவு தொகை என்று சொல்லாவிட்டாலும் கேரளாவிலுள்ள அவரது ரசிகர் மன்றங்கள் மூலம் உதவிகள் செய்து வருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அஜீத் மட்டும் எதுவுமே தெரியாமல் இருக்கிறார். வழக்கமாக திரைப்பட விளம்ப்ர நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் எதிலும் அவர் பங்குபெறுவதில்லை.
இந்தத் தீவரப் பேரிடரையும் ஒரு விழா என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? அதுபற்றி அவர் தரப்பிலிருந்து ஒரு செய்தியும் இல்லை.
அவர் மீதான இந்த விமர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருந்தது.அதை வளர விடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் இந்த முதல்பார்வை வந்திருக்கிறது. இது கேரள பாதிப்பையும் அதுகுறித்த இவரது பாராமுகத்தையும் மறைத்துவிடும் என்று எண்ணியிருக்கலாம்.
ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு எப்போதும் உதவாது இவ்வாறு திரைப்பட ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.











