சினிமா செய்திகள்

விடாமுயற்சி படத்தில் மிகப்பெரும் மாற்றம்?

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவிருக்கும் புதியபடம் விடாமுயற்சி. இந்தப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.

இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு நீரவ்ஷா.

படத்தின் நாயகி உள்ளிட்ட நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு பெரிய மாற்றம் நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.

அது என்னவென்றால்?

இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது.

பல காரணங்களால் விக்னேஷ்சிவன் அந்தப்படத்திலிருந்து வெளியேறவேண்டியதாகிவிட்டது.

இயக்குநர் வெளியேறினாலும் அஜீத் நடிப்பதும் லைகா தயாரிப்பதும் மாற்றமின்றித் தொடர்ந்தது.

அதன்பின், இப்படத்துக்குள் இயக்குநர் மகிழ்திருமேனி வந்தார்.

மே1,2023 அஜீத் பிறந்தநாளையொட்டி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தியும்
விடாமுயற்சி என்கிற பெயரும் அறிவிக்கப்பட்டது.

அண்மையில், இப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

அதையொட்டி பல சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன.

இதனால், பதட்டமடைந்த அஜீத், விடாமுயற்சியை வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு மாற்றிவிடும் முடிவை எடுத்திருக்கிறாராம்.

அதன்படி, விடாமுயற்சி படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அவை வெற்றிகரமாக நிறைவடைந்து விடும் என்றும் அதன்பின் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts