சினிமா செய்திகள்

சொல்லியடித்த விக்ரம் – அடுத்த பட ஆச்சரியம்

விக்ரம் இப்போது எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வீரசூரதீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்கிறார்.இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுவதென்றும் முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து இப்படத்தின் முதல்பாகத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பு இன்னொரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அந்தப்படத்தை யோகிபாபு நடித்த மண்டேலா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

இப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் மாவீரன் ஆகிய படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது.

வீரதீரசூரன் படத்துக்குப் பிறகு அடுத்த படத்தை ஒப்புக்கொள்வதில் மிகவும் தாமதம் செய்துவந்தார் விக்ரம்.நல்ல கதைகளோ பெரிய இயக்குநர்களோ வராமல் இருந்ததால் புதிய படம் கிடைக்கவில்லை என்றொரு தகவல் உலவிக் கொண்டிருந்தது.

உண்மையில் அடுத்த படத்தில் என் சம்பளம் ஐம்பது கோடி என்பதில் உறுதியாக இருந்தார் விக்ரம் என்று சொல்லப்பட்டது.

அந்த சம்பளத்தைத் தர ஒப்புக் கொள்ளும் நிறுவனத்துக்கே அடுத்த படம் என்கிற உறுதியோடிருந்த அவர் நினைத்ததை நடத்திக் காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள்.

ஆம்,சாந்தி டாக்கீஸ் நிறுவனம் விக்ரமுக்கு ஐம்பது கோடி சம்பளம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு ஒரு பெரும் தொகையை முன்பணமாகவும் கொடுத்துவிட்டதாம்.

இப்போதெல்லாம் எந்தப் படத்தின் வியாபாரமும் நல்லபடியாக நடப்பதில்லை,திரைப்படங்களின் மிக முக்கிய வியாபாரங்களான, இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் வியாபாரம் சுத்தமாக இல்லை.எனவே கதாநாயகர்களின் சம்பளத்தில் கட்டுப்பாடு வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் விக்ரம் நினைத்தபடி நடந்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

ஆகவே, அடுத்து இந்தப்படத்தின் படப்பிடிப்பில் தான் விக்ரம் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Related Posts