சினிமா செய்திகள்

வெளிநாட்டில் பெண் தேடும் சிவகார்த்திகேயன் ! 

சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ‘டாக்டர். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்றுநேற்றுநாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.

இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராஃபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. டான் படமும் விரைவில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 20வது படம் ‘டான்’.

ஆக, 21வது படமாக, தெலுங்கு படத்தைத் துவங்குகிறார் சிவகார்த்திகேயன். தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ எனும் சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படம் காமெடி + லவ் என ரொமாண்டிக் ஜானராக இருக்குமாம்.

படத்தின் கதை குறித்து விசாரிக்கும் போது, வெள்ளைக்கார பெண்ணை காதலித்து , கல்யாணம் செய்வது போன்ற கதைக்களமாம். அதனால், படத்துக்காக வெள்ளைக்கார நடிகையை வலைவீசித் தேடிவருகிறதாம் படக்குழு.

அதாவது, எமி ஜாக்சன் மாதிரியான ஒரு நடிகையாக இருக்க வேண்டுமென்று உலகமெங்கு ஹீரோயின் வேட்டை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

எப்படியும், விரைவில் நாயகியை உறுதி செய்துவிடுவார்கள். படத்துக்கான படப்பிடிப்பை ஜனவரியில் துவங்கவும் திட்டமாம்.

Related Posts