சினிமா செய்திகள்

பிகில் பட நிறுவனம் ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கை – ரசிகர்கள் விமர்சனம்

இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும்,அணமையில் வெளியான படத்தின் முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி கே.பி.செல்வா எனும் உதவி இயக்குநர், ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அப்போது இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது அதனால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் கே.பி.செல்வா, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தெதி பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

இயக்குநர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பட நிறுவனம் அப்போது சொன்ன செய்திக்கு மாறாக இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் முற்றிலும் தவறான ஒரு செய்தியை அறிக்கையாகக் கொடுத்திருக்கிறது பிகில் நிறுவனம் என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

Related Posts