சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

இவற்றில், வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்விதத் தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு சத்யஜோதி நிறுவனம், தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அந்தப்படத்தை ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அப்படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். த.ராமலிங்கம் கலை) இயக்கத்தையும், பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணிபுரியவிருக்கின்றனர். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சி இயக்கம் செய்யவிருக்கிறார்.

இந்தத் தகவல்களோடு இந்தப்படம் 2023 கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பை தனுஷ் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts