ஒரேமேடையில் கமல்,விஜய்,விஜய்சேதுபதி,உதயநிதி,நயன்தாரா – பிரமாண்டவிழா
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், பல திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலேயே விஷ்ணுவிஷால் நடித்த எஃப ஐ ஆர் படம் மூலம் திரைப்பட விநியோகத்தைத் தொடங்கிய ரெட்ஜெயண்ட் நிறுவனம், அதன்பின் விஜய் நடித்த பீஸ்ட், விஜய்சேதுபதியின் காத்துவாக்குலரெண்டுகாதல், சிவகார்த்திகேயனின் டான், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களை வெளியிட்டது.
இவை அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்தன. நல்ல வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு இலாபம் கொடுத்த படங்கள் என்று சொல்லப்பட்டது.
அதிலும் கமலுடைய விக்ரம் படம், தமிழ்நாட்டில் இதுவரை அதிகவசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைச் செய்திருந்த பாகுபலி 2 படத்தை விட அதிக வசூல் செய்து முதலிடம் பிடித்த மாபெரும் சாதனையும் நடந்துள்ளது.
இவற்றிற்குக் காரணம், ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படங்களை வெளியிட்டதுதான் காரணம் என்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அவர்கள் வெளியிட்டதால்தான் திரையரங்குக்காரர்கள் வசூலை சரியாகவும் உடனடியாகவும் கொடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதைக் கொண்டாடும் விதமாக, பீஸ்ட், காத்துவாக்குலரெண்டுகாதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம் ஆகிய ஐந்து படங்களின் வெற்றியைக் கொண்டாட ஒரு பெரியவிழா எடுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ரெட்ஜெயண்ட் நிறுவனம்.
நேரு விளையாட்டரங்கில் அவ்விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், வெற்றியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பிக்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் தேதி கேட்டிருக்கிறார்களாம்.
அவர் ஒப்புக்கொண்டு தேதி கொடுத்தால் ஒரேமேடையில் கமல்,விஜய்,விஜய்சேதுபதி,உதயநிதி மற்றும் நயன்தாரா சமந்தா ஆகியோர் முதலமைச்சர் கையால் பரிசு பெறுவார்கள்.











