சினிமா செய்திகள்

பிரேம்குமார் பகத்பாசில் பட சர்ச்சை – உண்மையா?

விஜய்சேதுபதி,த்ரிஷா நடித்த 96,கார்த்தி,அரவிந்தசாமி நடித்த மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் அடுத்தபடத்தில் நாயகனாக நடிக்கிறார் பகத் பாசில்.

மே 17 ஆம் தேதி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32 ஆவது படம்.

இப்படத்தில்,பகத் பாசில்,ஷிவதா நாயர்,சேத்தன்,ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

மே 17 ஆம் தேதியே தொடங்கிய இதன் படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.ஆனால்,திட்டமிட்டபடி தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடக்காமல் விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது.

தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து திருப்பதி,தலக்கோணம் உட்பட வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை,ஒரு நாளில் நடக்கிற ஒரு பயணக் கதை என்று சொல்லப்படுகிறது.தமிழ்நாட்டின் தென்மாவட்டமான தேனி மாவட்டத்திலுள்ள தேனியிலிருந்து அருகேயிருக்கும் வருசநாடு எனும் ஊருக்கு நாயகன் பயணிப்பதுதான் மையக்கதை என்கிறார்கள்.அந்தப்பயணத்தில் நடக்கிற நிகழ்வுகள்,திருப்பங்கள் ஆகியன திரைக்கதை.

கதையில் தேனியில் நடப்பதுபோல் இருந்தாலும் படப்பிடிப்பை அங்கு நடத்தாமல்,அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கதை தேனியில் நடக்கிறது என்பதைக் காட்ட வேண்டுமென்பதற்காக அங்கே போய் ஒரு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டாலும் அந்நிறுவனம் இப்படத்துக்கு முதலீடு மட்டும் செய்கிறது.முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பது இயக்குநர் பிரேம்குமார்தான்.

தேனியில் நடக்கிற கதைக்கு வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதால் சர்ச்சை உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

படத்தை முதல்பிரதி அடிப்படையில் இயக்குநரே தயாரிப்பதால் இந்த சர்ச்சை.என்ன சர்ச்சை?

தேனி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தினால் செலவு குறைவாகத்தான் ஆகும்.அதுவே,வெளிமாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு படப்பிடிப்பு இடங்களை மாற்றிக் கொண்டிருந்தால் கூடுதல் செலவு செய்யலாம்.அதில் தானும் கொஞ்சம் இலாபம் பார்க்கலாம் என்பது இயக்குநரின் கணக்காக இருக்கிறது.அதன் காரணமாகவே அவர் இவ்வாறு செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கேட்கும்போதே பதற வைக்கும் இந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மைகள் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டோருக்கே தெரியும் என்றாலும் இப்படி ஒரு தகவல் திரையுலக வட்டாரங்களில் உலவிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

Related Posts