இளவயது அமிதாப்பச்சனும் இன்னொரு பாக்யராஜும் – மொதராத்திரி மகிழ்ச்சி
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசியதாவது….
இந்தப்படத்தைத் தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.இரசிகர்களும் இந்தப்படத்தைக் கொண்டாடுகின்றனர்.இயக்குநர் ராஜா,ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்துவிட்டது.ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.மற்ற மொழிகளிலும் இந்தப்படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது.’குட் பேட் அக்லி’,’டியூட்’படங்களைத் தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றிப்படம்.இதோடு’இருமுடி கட்டு’படத்தையும் வெற்றிபெற வைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி….
நல்லபடத்தில் வேலை செய்திருக்கிறோம் என்று திருப்தி உள்ளது.வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன்….
என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி.அந்த நம்பிக்கையைல் காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன்.என் முதல்படத்திலேயே எனக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி என்றார்.
பப்ளிசிட்டி டிசைனர் வியாகி…..
ராஜா கதை சொன்னதிலிருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது.படத்தில் எல்லோருமே பாசிட்டிவாக இருந்தார்கள்.அதனுடைய ரிசல்ட் பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கிறது என்றார்.
நடிகை சுமித்ராதேவி….
இந்தப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.எங்கள் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.இயக்குநருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை வர்ஷினி கார்மேகம்….
தயாரிப்பாளர்கள்,இயக்குநர் ராஜா,ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.படத்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நடிகர் திலீப்….
படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.பல நாட்கள் கழித்து திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியுடன் செல்வதைப் பார்த்தேன்.நன்றி என்றார்.
நடிகை இனியா ராம்….
அறிமுக இயக்குநர் ராஜாவின் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.படம் பார்த்த பலரும் என்னிடம் பாக்யராஜ் படம் பார்த்தது போல உள்ளது என்றார்கள்.நிச்சயம் அடுத்த ஐந்து வருடத்திற்குள் இயக்குநர் ராஜா முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருப்பார்.ரிஷிகாந்தும் திறமையான நடிகர்.தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். நன்றி என்றார்.
நடிகை தீபிகா….
கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.இந்தப்படம் மூலம் எங்கள் எல்லோருக்கும் அடையாளம் கிடைத்துள்ளது என்றார்.
நடிகர் கார்த்திகேயன் டிகே….
எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி.படத்தில் நடித்தவர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் இந்தப்படம் ரொம்பவே முக்கியமானது.நீண்டபயணத்தின் முதல்படியாக இந்த வெற்றியைப் பார்க்கிறேன்.நன்றி என்றார்.
நடிகர் அப்துல் லீ….
வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி.இந்தப்படத்தில் நடித்த நடிகர்களையும் தொழில்நுட்பக் குழுவினரையும் அடுத்தநிலைக்கு இந்தப்படம் எடுத்துச் சென்றுள்ளது.பல வருட உழைப்பிற்கு பிறகு என்னுடைய முகமும் இந்தப்படத்தின் போஸ்டரில் வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது.படத்தை வெற்றிபெற வைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் பரத் சங்கர்….
என்னுடைய இசைப் பயணத்தில் இந்தப்படம் முக்கியமான மைல்கல்.சின்ன படம்,பெரிய படம் என்று கிடையாது.நல்ல படம்,சுமாரான படம் என்று வேண்டுமானால் பிரிக்கலாம்.ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்கவேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார். அவருக்கு வாழ்த்துகள்.இந்தப்படத்தைத் தயாரிக்க முன்வந்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி என்றார்.
நடிகர் சேத்தன்….
புதிய திறமையானவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.இதை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.இயக்குநர் ராஜாவுக்கும் நன்றி.படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தோம்.இந்தப்படத்தில் இருந்து பல சூப்பர் ஸ்டார்களும்,லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள்.ரிஷியை திரையில் பார்க்கும்பொழுது இளவயது அமிதாப்பச்சனை பார்ப்பது போல இருந்தது.ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் பகவதி பெருமாள்….
சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் இலட்சம் பேர் காணாமல் போகிறார்கள்.இதுபோன்ற நல்லபடங்கள் வெளியாகி வெற்றிபெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம்.அந்தவகையில்,இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.பலருடைய வாழ்க்கையில் இந்தப்படம் ஒளி ஏற்றி இருக்கிறது.சின்னபட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்குத்தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது.உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும் என்றார்.
நடிகர் ரிஷிகாந்த்….
உங்கள் வீட்டுப் பையனாக நினைத்து எனக்கும் இந்தப்படத்திற்கும் ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் இரசிகர்களுக்கும் நன்றி.ஆறு வருடங்களாக இந்தப்படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம்.எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.அது இன்று நடந்திருக்கிறது.படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி….
என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும்,ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும்,என் படக்குழுவினருக்கும் நன்றி.அனைத்துத் திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி.அனிஷ்மா திறமையான நடிகை.ஆறு வருடத்திற்கு முன்னால் இந்தக்கதையை எடுத்துக்கொண்டு அலைந்தபோது எல்லோரும் சொன்ன ஒரேவார்த்தை ரிஷிகாந்தை மாற்றவேண்டும் என்பதுதான்.ஆனால்,இப்போது தமிழ்சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப்பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார்.என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி.சின்னப்படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை.அதுமட்டும்தான் தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.














