மணமகனுக்கே கடைசிவரை தெரியாமல்,மணமகளுக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் ஒரு திருமண நிகழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லி அதன்மூலம்,குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனிதமனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் படம் மொதராத்திரி.கிராமத்தில் நடக்கும் கதை
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மொத ராத்திரி. சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.அந்த வரிசையில் சேரும் படமாக இது இருக்கிறது. இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிப்பு இயக்கத்தில் மார்ச் 19 ஆம் தேதி வெளியான படம் யூத்.சிறை படம் மூலம் பாராட்டுகளைப் பெற்ற அனிஷ்மா,மீனாட்சி தினேஷ் மற்றும் பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படம் முழுக்க வன்முறையைக் காட்சிப்படுத்திவிட்டு கடைசியில் வன்முறை தப்பு என்று கருத்துச் சொல்கிற படங்களைப் பார்த்திருக்கிறோம்.பள்ளி வாழ்க்கையில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் தப்பு செய்யும் கதைநாயகனை வைத்துக் கொண்டு படிப்பு முக்கியம் என்கிற கருத்தைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யூத். குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் 11 ஆம் வகுப்பில் சேரமுடியாத சிக்கலில் இருக்கும்
அசுரன்,விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான கென்கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் யூத். பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில்,அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ்,பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்
சிறைக்கைதி அப்துல்ரவூப். கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்.அவரை விசாரணைக்காக சுமார் நானூறு கிலோமீட்டர் (வேலூரிலிருந்து சிவகங்கை) அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு.இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம்




















