பாக்யராஜ் சார் படம்போல் இருக்கிறது மொதராத்திரி – கார்த்திக்சுப்புராஜ் பாராட்டு
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மொத ராத்திரி.
சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.அந்த வரிசையில் சேரும் படமாக இது இருக்கிறது.
இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் ரவிசங்கர் பேசியதாவது….
நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி.ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்குப் பிடித்துவிட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்னபட்ஜெட்டில் வந்த நல்லபடங்கள் வெற்றியடைந்துள்ளது.அதுபோல,இந்தப்படமும் நல்ல கதைக்களம் கொண்டிருக்கிறது.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.இரசிகர்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் வெங்கடேஷ்….
இந்தப்படத்தை இயக்க புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி.’அங்காடி தெரு’படத்திற்குப் பின்பு நெகட்டிவ் கதாபாத்திரங்கள்தான் எனக்கு அதிகம் வந்தது.ஆனால்,இதில் வித்தியாசமான கதாபாத்திரம்.நடிகர் ரிஷிகாந்த் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் எங்கே அவர் நடிப்பில் என்னை ஓவர்டேக் செய்துவிடுவாரோ என்று கவனத்துடனே நடித்தேன்.நிச்சயம் பெரிய நடிகராக வருவார்.உதவிஇயக்குநர்கள்,படக்குழுவினர் என அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.படம் சிறப்பாக வந்துள்ளது. வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
படத்திகுப்பாளர் அசோக் அர்ஜூனன்….
பெரிய நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறது என்னும்போதே படத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது.உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை என்றார்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி….
புதியவர்களான எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சேத்தன்….
இயக்குநர் ராஜா இந்தக்கதை சொல்லும்போது குடும்பமாக அமர்ந்து கேட்டு சிரித்தோம்.முதலில் என் மனைவியைத்தான் நடிக்கக் கேட்டிருந்தார்கள்.ஆனால் டேட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.இதுபோன்ற புது அணியினருக்கு ஆதரவு கொடுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி.உங்கள் அனைவரது ஆதரவும் தேவை என்றார்.
இசையமைப்பாளர் பரத் சங்கர்….
படத்தின் இயக்குநர் ராஜா வெள்ளந்தியான மனிதர்.ஆனால், படம் அதற்கு நேர்மாறாக சிறப்பாக வந்துள்ளது.படத்தில் அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர்.தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி!ஆகஸ்ட் 21 அன்று படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
இயக்குநர் ஸ்ரீகணேஷ்….
படத்தின் கதாநாயகன் ரிஷி எனக்கு 10 வருடங்களுக்கு மேலாக பழக்கம்.கதாநாயகனாக அவர் இந்தப்படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. படம் சிறப்பாக வந்துள்ளது.படக்குழுவினர் பலருக்கும் இது அறிமுகபடம்.சிறப்பாக உழைத்துள்ளனர்.இந்தவருடத்தின் சிறந்தபடங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றார்.
நடிகை அனிஷ்மா….
இந்தப்படத்தில் என்னை தேர்வு செய்த இயக்குநர்,தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி.இந்தப்படத்தில் முத்துசெல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன்….
திறமையான நடிகர்களைத் தேர்வு செய்வதிலேயே படம் பாதி வெற்றியடைந்துவிட்டது.இந்தப்படத்தின் மூலம் புதுஉலகத்திற்கு சென்றுவிட்டு வந்திருக்கிறேன்.படத்திற்கு உங்களுடைய ஆதரவும் தேவை.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என்றார்.
இயக்குநர் பாரி….
என்னைப்போன்று பல கனவுகளோடு கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வரும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் படங்களில் ஒன்றாக இந்தப்படத்தை நான் பார்க்கிறேன்.ஒரு கருத்தை நகைச்சுவையாகச் சொன்னால் இன்னும் அதிகப்பேரைச் சென்றடையும்.பல கருத்துக்களை இந்த படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். ரிஷிக்காகவே இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். இரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.பெரியபடங்கள் எப்போதும் உங்களை உற்சாகப்படுத்தும்.ஆனால்,சின்னபடங்கள்தான் ஆச்சரியப்படுத்தும்.அதனால்,இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்…
ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடிப்பவர் ரிஷி.இந்தப்படத்தை பார்க்கும்பொழுது பாக்யராஜ் சாருடைய படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது.எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் ‘அயலான்’ ரவிக்குமார்….
எதை படமாக எடுக்கிறார்கள் என்பதில்தான் ஒரு இயக்குநரின் திறமை உள்ளது.அந்தவகையில் இந்தப்படத்தை இயக்குநர் சிறப்பாக எடுத்துள்ளார்.நடிகர் ரிஷி ஹீரோவாக அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார் என்பதை படம் பார்க்கும்பொழுது புரிந்துகொள்ள முடிந்தது. அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.இந்தக்கதையை தயாரிப்பு நிறுவனம் புரிந்துகொண்டு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி….
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனால்தான் இந்தப்படம் இன்று உருவாகியுள்ளது.அவருக்கு மிக்க நன்றி.என் கதையின் ஆன்மாவை புரிந்துகொண்டு வாய்ப்பளித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த எனக்கு ஆதரவு கொடுத்த நண்பர்கள்,குடும்பத்தினர்,உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி.சின்னபட்ஜெட் படங்கள்தான் தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.என்னுடைய அனுபவத்திலிருந்து உருவான கதைதான் இந்தப்படம்.என் வாழ்க்கையின் அனைத்துப் பெண்களுக்கும் இந்தப்படத்தை சமர்ப்பிக்கிறேன்.நிகழ்விற்கு வந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகர் ரிஷிகாந்த்….
பல படங்களில் என்னுடைய கதாபாத்திரங்களைக் கவனித்துப் பாராட்டிய ஊடகங்களுக்கு என்னுடைய முதல் நன்றி.அதேபோல நான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திற்கும் உங்கள் அனைவரது ஆதரவும் தேவை.’மொத ராத்திரி’ படத்தின் கதை ஷார்ட்ஃபிலிமாக ராஜா கொண்டு வந்தார்.அதன்பிறகு ஆறுவருடம் பயணம் செய்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.என்னை விட்டுக்கொடுக்காத இயக்குநருக்கும்,கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.நல்லதொரு படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி.நிச்சயம் குடும்பமாக இந்தப்படத்தை இரசிப்பீர்கள்.படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.திரையரங்குகளில் படம் பாருங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.











