தெலுங்கில் சூப்பர்ஹிட் தமிழிலும் வரவேற்பு – இருமுடிகட்டு படக்குழு மகிழ்ச்சி
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் தயாரிக்க,டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்றது.
அதில் தயாரிப்பாளர் ரவி சங்கர் பேசியதாவது….
திரில்லர், குடும்பக்கதை மற்றும் ஆன்மீகம் என மூன்றுவிதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்தக்கதையை எங்களிடம் சொன்னார்.எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆனால்,அதை சிவா நேர்த்தியாக இந்தப்படத்தில் செய்துகாட்டினார்.மாஸ் மகாராஜா ரவி தேஜா,நடிகை பிரியா பவானி சங்கர் என நடிகர்களும்,தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.தென்னிந்திய இரசிகர்கள் அனைவரும் இந்த கல்ட் கிளாசிக் படத்தை திரையரங்குகளில் இரசிப்பார்கள்.சிவா நிர்வாணாவின் இந்தப்படத்தை அந்தக் கடவுள் ஐயப்பாவே தேர்வு செய்துள்ளார்.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
தமிழ் வசனகர்த்தா விஜய்பாலாஜி….
மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.மூன்று தந்தைகளுக்கும் இடையே நடைபெறும் கதை இது.இந்தப்படத்திற்கு பெரும்பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான்.மெட்ராஸ்தினத்தில் சென்னை வந்திருக்கிறார் மாஸ் மகாராஜா.படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால்,…
ரவிதேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதியிருப்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று.தமிழ்ப்படத்தைவிட இந்தப்படத்தை நிச்சயம் இரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.பிரியா பவானி சங்கரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.படத்தின் கிளைமாக்ஸில் நெகிழ்ந்து விட்டேன்.இந்தப்படத்தில் நான் எழுதிய மூன்றுபாடல்களுமே கதையோடு ஒன்றிய முக்கியமான பாடல்கள். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா….
ரவி தேஜா சாரின் படத்தில் பணிபுரிந்திருப்பது பெருமையான விஷயம்.சிவா சார் கதையை சிறப்பாக எடுத்துள்ளார்.நிச்சயம் தமிழ் இரசிகர்களுக்கும் இது புதுவிதமான கதையாக இருக்கும் என்றார்.
குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா….
இந்தப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவா சார்,மாஸ் மகாராஜா ரவி தேஜா சார்,பிரியா பவானி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர்….
படத்தின் கதை கேட்டபோது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்தபோது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது.மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின்போது எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார்.இந்தப்படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது.ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்கமுடியாத அனுபவம்.வேறுமொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் இரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள்.மொழி என்பது தடையல்ல!அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்தப்படம் வெற்றி பெறும் என்றார்.
இயக்குநர் சிவா நிர்வாணா….
தமிழ்சினிமாவோடு எப்போதும் எனக்கு எமோஷனல் கனெக்ட் உண்டு.குறிப்பாக பாரதிராஜா சார்,பாக்யராஜ் சார் படங்கள் மிகவும் பிடிக்கும்.திரையரங்குகளை விட்டு இரசிகர்கள் வெளியேறும்பொழுது அவர்களுக்கு அந்தப்படத்தில் இருந்து எடுத்துக்கொள்ள நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் இருக்கவேண்டும்.அந்தமாதிரி படங்களை இயக்கவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.அந்தவகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது.குடும்பத்துடன் பார்த்து மகிழும் திரைப்படம் ஆக ‘இருமுடி கட்டு’ இருக்கும்.இந்தப்படம் பார்த்து முடித்ததும் அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள்,மனைவியைப் பற்றி யோசிப்பீர்கள்.தெலுங்கில் படம் சூப்பர்ஹிட். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள்.அதைப்போலவே தமிழிலும் இரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கவேண்டும் என விரும்புகிறேன்.படத்திற்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.படத்தில் பிரியாவின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.ரவிதேஜா சாரை இந்தப்படத்தில் வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.நிச்சயம் தமிழ் இரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்….
ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம்.’பொல்லாதவன்’,’ராஜா ராணி’ படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது.அதுபோலவே ‘இருமுடி கட்டு’ படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது.இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜா சாருக்கு ரசிகர்கள்.’பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அதுபோலவே கமர்சியல் படங்களில் ரவிதேஜா சருக்கும் தனித்துவம் இருக்கிறது.நிறைய இயக்குநர்களும் அவருக்கு இரசிகர்கள்.இனி சிவா படங்களுக்கு என்று தனி இரசிகர்கள் உருவாகி விடுவார்கள்.தெலுங்கில் இந்தப்படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்தப்படத்திற்காக பல விருதுகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன்.குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.தொழில்நுட்பக்குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.நன்றி என்றார்.
நடிகர் ரவிதேஜா….
இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.ஜிவி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப்படத்தின் ஆன்மா. தெலுங்கில் இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்.நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி.இயக்குநர் சிவாவை எனக்குப் பிடிக்கும்.அது ஏன் என்பதை படத்தின் வெற்றிவிழாவில் சொல்கிறேன்.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.














