தனுஷ் தயாரிப்பில் அஜீத் நடிக்கிறார்?
நடிகர் அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப்படத்துக்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் அஜீத் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜீத் இன்னொரு படத்தில் நடிப்பது பற்றிய தகவல் திரைத்துறை வட்டாரங்களில் உலவுகிறது.
அதன்படி, சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த நடிகர் தனுஷ் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க முடிவு செய்திருக்கிறாராம்.அவருடைய வுண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்களில் அவரே நடிப்பது மட்டுமின்றி பிற கதாநாயகர்களை வைத்தும் படம் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.
எனவே, வுண்டர்பார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவேண்டும் எனக்கேட்டு அஜீத்தைக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக, தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் அஜீத்தின் மேலாளர் சுரேஷ்சந்திராவைச் சந்தித்துப் பேசியதாகவும் அஜீத் மற்றும் தனுஷ் ஆகியோரின் ஒப்புதலோடு அந்தச் சந்திப்பு நடந்ததாகவும் தகவல்.
அச்சந்திப்பில், தனுஷ் தயாரிப்பில் சில நிபந்தனைகளுடன் அஜீத் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அஜீத்தின் மேலாளர் சுரேஷ்சந்திராவிடம் கேட்டால், அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்.










