Home Posts tagged Wunderbar films
சினிமா செய்திகள்

மொத்தமாக 36 கோடி கொடுத்த தனுஷ்? – நடந்தது என்ன?

2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதில், அந்தப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்றும் பிரபல திரைப்பட நிதியாளர் அன்புச் செழியன் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அப்போதிருந்து அந்தப் படத்தின் முன்
சினிமா செய்திகள்

தனுஷ் ஏமாந்தாரா? – மாரிசெல்வராஜ் பட அறிவிப்பால் எழுந்துள்ள கேள்வி

ஏப்ரல் 9,2023 அன்று முன்னிரவு 7.30 மணிக்கு தனுஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்… தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் (ZEE Studios) மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar
சினிமா செய்திகள்

தனுஷ் தயாரிப்பில் அஜீத் நடிக்கிறார்?

நடிகர் அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்துக்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் அஜீத் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜீத் இன்னொரு படத்தில் நடிப்பது பற்றிய தகவல் திரைத்துறை வட்டாரங்களில் உலவுகிறது. அதன்படி, சில
சினிமா செய்திகள்

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் தனுஷ் – 3 படங்கள் தயாரிக்கிறார்

நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார். அதில் முதலாவதாக அவர் மனைவி இயக்கிய 3 படம் தயாரிக்கப்பட்டது. அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உட்பட பல படங்களைத் தயாரித்தார். காக்காமுட்டை, விசாரணை போன்ற விருதுபெற்ற படங்களும் அந்நிறுவனத்தின் தயாரிப்பில்
சினிமா செய்திகள்

விஷாலை வைத்து படமெடுக்கும் தனுஷ் மேனேஜர்

தனுஷின் படத்தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் வினோத். இவர் அங்கு பணிபுரியும்போதே வேறு சில படங்களின் தயாரிப்புக்கு உதவியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்தைத் தனியாகத் தயாரிக்கவிருக்கிறாராம். தனுஷிடம் பணிபுரிகிறவர் என்பதால் அவரை நாயகனாக வைத்துத்தான் படம் எடுக்கப் போகிறார் என்று நினைக்கலாம்.
சினிமா செய்திகள்

கோபமான ரஜினி சாந்தப்படுத்திய தனுஷ் – காலா அறிவிப்பின் பின்னணி

ஜூன் 7 ஆம் தேதி காலா படம் வெளியானது. ஜூலை 7 ஆம் தேதி காலா படம் இலாபம் தந்துள்ளது என்று தனுஷின் நிறுவனம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் என்ன? காலா படம் வெளியான நாளிலிருந்தே அந்தப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் படத்தைத் தயாரித்த தனுஷோ, படத்தில் நடித்த ரஜினியோ அதுபற்றிக் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தச் செய்திகள்
சினிமா செய்திகள்

ரஜினியின் காலா வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா.ஜூன் மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்தது. இந்தப்படத்துக்குத் தொடக்கம் முதலே வரவேற்பு குறைவாக இருந்ததென்று சொல்லப்பட்டது. வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் காலா படம் நட்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நட்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இதனால்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் இவர்தான்

தனுஷ் இப்போது வடசென்னை, என்னைநோக்கிப் பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றனவாம். இப்போது நடைபெறுகிற வேலை நிறுத்தம் முடிந்தவுடன் மாரி 2, என்னைநோக்கிப்பாயும்தோட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிடுவாராம். அதன்பின் ஜூன் முதல் அவரே இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பைத்