சினிமா செய்திகள்

ரஜினியின் காலா வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா.ஜூன் மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்தது.

இந்தப்படத்துக்குத் தொடக்கம் முதலே வரவேற்பு குறைவாக இருந்ததென்று சொல்லப்பட்டது.

வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் காலா படம் நட்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நட்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் சொல்லப்பட்டது.

இதனால் விநியோகஸ்தர்களிடமிருந்து முன் தொகையாகப் பெற்ற தொகையை திருப்பித் தர வேண்டியிருக்கும் என்று சொல்லப்பட்டது.

படம் வெளியாகி ஒரு மாதம் முடிந்த நிலையில், காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது என தனுஷின் பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காலா படம் எங்களுக்கு நல்ல இலாபத்தைத் தந்துள்ளது. படம் குறித்து எதிர்மறையாக வெளிவரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இப்படத்தின் வசூல் குறித்து பல்வேறு செய்திகள் வந்துவிட்டன் என்றாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இப்போதுதான் வந்திருக்கிறது.

Related Posts