சிகரெட் கொளுத்தி – விஜய்க்கு பதிலடி கொடுத்த பாமக
சர்கார் படத்தின் முதல்பார்வையில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது.
பசுமைத் தாயகம் அமைப்பினர் அது பற்றிப் புகார் கொடுத்தனர்.
அதனால், பொது சுகாதாரத்துறை சர்கார் படக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுத்தது.
அதையடுத்து அந்தப்படத்தை திரும்பப் பெற்றது படக்குழு.
ஆனாலும் சிக்கல் அதோடு முடியவில்லை, பாமகவினருக்கு எதிராக குடிசை கொளுத்தி பாமக என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி பாமகவினரை வறுத்தெடுத்தார்கள்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சிகரெட் கொளுத்தி விஜய் என்கிற ஹேஷ்டாக்கை உருவாக்கி விஜய்க்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கோகோ கோலா நிறுவன விளம்பரத்தில் நடித்து சம்பாதித்தார் – கோகோ கோலா தண்ணீரை உறிஞ்சுவதாக வசனம் பேசி படத்திலும் நடித்து சம்பாதித்தார் !
காற்றில் ஊழல் செய்வதாக சொல்லி படத்தில் நடித்தார் – தற்போது அந்த ஊழல் செய்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கிறார் !
#சிகரெட்_கொளுத்தி_விஜய்
கார்பரேட்காரன் காசுலதான் சினிமாவுல வளர்ந்ததே…
அந்தப்பாசம்தான் சிகரெட் கம்பணிக்கு ஓத்து ஊதுது..
ரசிகன் எக்கேடு கெட்டா எனக்கென்னடா
#சிகரெட்_கொளுத்தி_விஜய்
அறிவுரைகளை நாங்கள் வழங்கவில்லை !
மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் சொன்ன செய்திகளை தான் நாங்கள் நியாபகப்படுத்துகிறோம் !
#சிகரெட்_கொளுத்தி_விஜய்
இவ்வாறு பலவிதமாய் விமர்சனம் செய்து வருகின்றனர்.










