சினிமா செய்திகள்

பாமகவுக்கு எதிராக விஸ்வரூபமெடுத்த விஜய் ரசிகர்கள்

புகைபொருட்களையும் புகைப்பழக்கத்தையும் மறைமுகமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சர்க்கார் படத்தின் போஸ்டர் வடிவமைக்கப் பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள தமிழக அரசின் பொது சுகாதாரதுறை படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.

இதற்குக் காரணம் பாமகவின் துணை அமைப்பான பசுமைத்தாயகம் கொடுத்த புகார்தான். புகார் கொடுத்து அக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு,வெறும் எச்சரிக்கையுடன் மட்டுமின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காக பசுமைத் தாயகம் அமைப்பு பாடுபடும் என்றும் கூறியிருந்தார்கள்.

இதனால் பாமகவுக்கு எதிராகவும் மருத்துவர் இராமதாசு
மற்றும் அன்புமணிக்கெதிராகவும் விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

ட்விட்டரில் குடிசை கொளுத்தி பாமக என்கிற ஹேஷ்டேக்கில், கடுமையாகப் பேசி வருகின்றனர்.

ஒரு ஊருயே கொளுத்துவ இதில் நீ நியாயம் பேசிறியா?
உன் கிட்ட பதவி பணம் னு சகலமும் இருக்கலாம்.
என் கிட்ட உண்மை இருக்கு,
எனக்கு ஒன்னுனா உயிரு கொடுக்க ஒரு கூட்டமே இருக்கு

விஜயை எதிர்த்ததால ஜெயலலிதாவுக்கு வந்த நிலைமையை யோசிச்சு பாத்துட்டு விஜய்கிட்ட மோதுங்க அன்புமணி
#குடிசைகொளுத்திபாமக

இது தெரியாதா உங்களுக்கு? குடிசையை கொளுத்தும் கட்ச்சிக்கு தலைவர்,எங்கள் கட்ச்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று சொல்லிவிட்டு முக்கிய பதவிகளை அப்பனும்,மகனும் ஷேர் பண்ணிக்கிற எச்சைகள்,சாதி கலவரல் தூண்டுபவன்,மறுத்துவ துறையில் ஊழல் புகாரில் சிக்கிய கயவன் #குடிசைகொளுத்திபாமக

அப்ப அப்ப வந்து இப்படி வம்பிழுத்து செருப்படி வாங்கி பொழப்பு நடத்து அப்ப தான் நீ உன் கட்சி கொஞ்சம் ஞாபகம் வரும் சொம்புமணி

இப்படி ஏராளமான ட்வீட்டுகளைப் போட்டுத்தள்ளுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஒரிரு மணி நேரங்களில் இந்த ஹேஷ்டேக்கில் சுமார் 17 ஆயிரம் ட்வீட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. இதோடு முடியாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Related Posts