சிவகார்த்திகேயனைக் கலங்க வைத்த ரசிகர்
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி கதாநாயகன் என்கிற கவுரவத்தைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்டிருந்தாலும் அவருக்கு ஆறாத மனக்குறை உண்டு.
அவருடைய வெற்றியைப் பார்த்துப் பூரித்துப்போக அவருடைய தந்தை இல்லையே என்பதுதான் அந்தக்குறை.
தந்தையை நினைத்து பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட நிஅக்ழ்வுகளும் உண்டு.
சிவகார்த்திகேயனின் தந்தைப்பாசத்தை உணர்ந்த அவருடைய ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் தன் தந்தையுடன் இருப்பது போன்ற ஒரு ஓவியம் வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

siva art
அதைப் பார்த்த சிவகார்த்திகேயன், என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை, இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று நெகிழ்வுடன் பதிவிட்டிருக்கிறார்.











